இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி…

வி. அருண

அவதானிப்பு, செயல்வழிக் கற்றலின் அடுத்த படியாகக் காடு வளர்ப்பு, மீட்டெடுப்புப் பணிகளில் திருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இப்பணியில் வெவ்வேறு நிலைகள் உள்ளன.

காடுகளுக்குச் சென்றோ , ஆரோக்கியமான தாய் மரங்கள் இருக்கும் சோலைகள், கோயில் காடுகள், மரங்கள் இருக்கும் கோயில்களுக்குச் சரியான காலத்தில் சென்றோ விதைகளைச் சேகரிப்போம். இச்செயல் மூலம் மரங்களை அடையாளம் காணவும் மரங்களின் வாழ்க்கைப் பருவங்களை அவதானித்துப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவிற்குள் பல சுற்றுச்சூழல் மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியின் நிலப்பரப்பைப் பொறுத்தும், மழை அளவைப் பொ றுத்தும், தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும், சூழலியல் தொகுதிகள் வேறுபடும். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியும் அப்பகுதிக்கு ஏற்றவாறு மாறும். இம்மாற்றங்களை அவதானித்துப் பதிவுசெய்வது ஒரு சிறப்பான கற்றல் முறை .

நேரடிப் படிப்பு

விதைகளைச் சேகரித்து அவற்றைச் சரியா ன முறையில் பக்குவப்படுத்தி நடுவதற்குத் தயார் செய்ய வேண்டும். இதில் பல நுணுக்கமான உத்திகள் உள்ளன. காட்டிற்குச் சென்று விதை சேகரிப்பது ஓர் அற்புதமான அனுபவம். அதில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. காட்டில் வாழும் வெவ்வே று பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் வேறு பல உயிரினங்கள் சூழலியலில் வகிக்கும் பங்கையும் அவதானித்துப் புரிந்து கொள்ளலாம்.

காலத்துக்கு ஏற்ப வலசை வரும் பறவைகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் அடையாளம் கண்டு நமது புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம். காலநிலை மாற்றத்தால் வலசை போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவுசெய்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

உற்சாகம் தரும் வெளி வேலை

நம் பகுதிகளைச் சேர்ந்த மரங்கள் எப்போது பூக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா ? பெரும்பாலும் தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை . இந்த வேளையில் பூத்தால்தா ன் பருவமழையின்போது விதை விட்டு, அது முளைப்பதற்குச் சரியாக இருக்கும்.

மழைக் காலத்தில் தாய் மரங்களுக்குக் கீழ் பல விதைகள் முளைத்திருக்கும். அங்கே அவை பிழைக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாகத் தெரிந்தால், அந்தக் கன்றுகளைக் கொண்டுவந்து பைகளில் நட்டு வளர்த்துப் பின்னர் நடலாம்.

மரங்களை நடுவது எல்லாரது மனத்திற்கும் பிடித்த ஒரு செயலே . எங்கள் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் இதில் பங்கேற்பார்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது நேர்மறை சிந்தனைகளையும் நேர்மறை மனப்பான்மையையும் வளர்க்கிறது.

இக்காலத்தில் சிறுவர்கள் மட்டுமல்லாமல், நாம் எல்லாருமே திறந்தவெளிகளில் பொழுதைக் கழிப்பதன் முக்கியத்துவத்தைத் தனியாக வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை . வீட்டிற்குள் இருக்கும்போது பெரும்பாலும் ஏதாவது ஒரு திரையைப் பார்ப்பதிலேயே கழிக்கிறோம். நிச்சயமாக அது நம் நேரத்தைப் பயனின்றிக் கொல்கிறது.

வல்லுநர் வழி காட்டுதல் தேவை

இயற்கையில் நேரத்தைக் கழிப்பது, கடினமான வேலைகளைச் செய்வது, உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். மரம் நடுவது எல்லாருக்கும் பிடித்திருந்தாலும் நட்ட மரங்களைப் பேணிக்காப்பதில் அதே அளவு அக்கறையை மக்கள் காட்டுவதில்லை . நாம் நட்ட மரங்கள் சுயச்சார்புடன் வாழும் வரை அவற்றுக்கு நாமே பொறுப்பு. அதற்கு விதி விலக்காக இருப்பது பெரிய அளவிலான காடு மீட்டெடுப்புப் பணிதான்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் காடு வளர்ப்பு போன்ற செயல்பாடுகளை விவரமறிந்த சரியான வல்லுநர்களின் வழி காட்டுதலுடன் மேற்கொள்வதே சரியானது. உதாரணத்திற்கு ஒவ்வொரு சூழலியல் தொகுதிக்கு ஏற்ற மரங்கள், செடிகொடிகளை நடும்போது அவை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு வளர்ந்து பற்பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக மாறும். தகாத மரங்களை நடும்பொழுது இப்படிப்பட்ட உறவு உருவாவதில்லை. அது மட்டுமல்லாமல் அவற்றில் பல மரங்கள் விழுந்தோ , மற்ற உயிரினங்களைப் பாதித்தோ சுற்றுச்சூழலையும் சேர்த்தே பாதிக்கின்றன.

உடல் உழைப்பை வரவேற்போம

காடு மீட்டெடுப்புப் பணியிலும் மலை மீது ஆயிரக்கணக்கான மரங்களை நடும்பொழுதும் மழையை நம்பியே அந்த வேலையைச் செய்வோம். மழைக்காலத்தில் நடப்படும் மரங்களுக்கு அடுத்து வரும் கோடைக் காலத்தில் பிழைத்திருப்பது பெரிய சவால்.

அதே நேரம் கோடைக் காலத்தில் கொஞ்சமாவது மழை பெய்யும். இந்தக் கோடை நாட்களில் மலை மீது நாங்கள் நட்ட சில மரக்கன்றுகளுக்குப் பரிசோதனையாக நீர் ஊற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நீர் ஊற்றும் மரங்கள் பிழைக்கும் சதவீதத்துடன், நீர் ஊற்றாத மரங்களின் பிழைக்கும் சதவீதத்தை ஒப்பீடு செய்யலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. இதை மாணவ மாணவிகளுடன் பகிர்ந்தபொழுது ஆர்வத்துடன் பங்கேற்க ஒப்புக்கொண்டனர். கோடை முழுவதும் சற்றும் சலிப்படையாமல் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களான எங்களுக்கு அது மகிழ்வூட்டியது.

சிரமமான உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய பெரும்பாலோர் தற்போது முன்வருவதில்லை . சொகுசாக இருப்பது ஒரு விரும்பத்தக்க நிலையாகி விட்டது. இதன் பின்விளைவாக சமூகத்தில் பெரும்பாலோரின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் இதை உணரலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பைக் கல்வியாளர்கள் வலியுறுத்த வேண

Leave a Reply

Your email address will not be published.