இயற்கையிடம் கற்போம்: மரங்களைப் புரிந்துகொள்ள உதவிய பணியர்

வி. அருண

நான்கு மாதக் காலத்தில் புதர்கள், நீரோட்டங்கள், நீர்நிலைகளைப் பற்றி நேரடி அவதானி ப்பு மூலம் தி ருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொண்டோம். ஆண்டுதோறும் மேற்குt மலைத் தொடருக்கு ஒரு முறை சென்றுவருவோம். மேற்கண்ட அவதானிப்புக்குப் பிறகு, மேற்கு மலைத் தொடர் பயணத்திற்கு உற்சாகமாகத் தயாரானோம். அங்கே செல்வதன் முக்கிய நோக்கம், அந்த இயற்கை எழிலில் மூழ்கி இயற்கையுடன் உறவை வலுப்படுத்தி க்கொள்வது மட்டுமல்லாமல் இயற்கையின் வெவ்வேறு அங்கங்களைப் பற்றிக் கற்றுகொள்வதும்தான்.

வழக்கமாகப் பறவைகளை நோக்குவதிலும் பறவையினங்களை அடையாளம் காண்பதிலும் நிறைய நேரத்தை க் கழிப்போம். அதில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்ற பின் பூச்சிகளைப் பற்றிக் கற்றோம். பிறகு கற்றலை ஆழப்படுத்தி ஒவ்வொரு உயிரினமும் இயற்கையில் வகிக்கும் முதன்மைப் பங்கையும், தொடர்புகளையும் கவனிக்க ஆரம்பித்தோம். இயற்கையின் மர்மங்களும் புதிர்களும் சிறிது சிறிதாகப் புலப்பட ஆரம்பித்தன. இந்த முறை இன்னும் ஓர் அம்சத்தையும் எங்களின் கற்றலில் சேர்த்துக்கொண்டோ ம்: அது மரங்களை அடையா ளம் காண்பது.

பணியர் ஆசிரிய

நாங்கள் பல ஆண்டுகளா க இப்பகுதி க்குச் செ ன்று திரும்பிக்கொண்டிருந்தாலும் அங்கிருக்கும் மரங்களைப் பற்றி கற்றுக்கொள்ளும் அளவிற்குத் தீவிரமோ தன்னம்பிக்கையோ எங்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை . ஏனென்றால் ஒவ்வொரு மரமும் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும். அவற்றின் இலைகள், பூக்கள், கனிகளை அவ்வளவு எளிதில் பார்த்துவி ட முடியாது. அங்கிருக்கும் மரங்களை அடையாளம் கண்டு கற்றுக்கொள்வதற்கு எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர் ஷாஜி . அவர் மேற்கு மலைத் தொடர் பழங்குடிஇனங்களில் ஒன்றான பணியர் இனத்தை ச் சேர்ந்தவர்.

அவ்வினத்து மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அக்காட்டில் வாழ்ந்து வருகின்றனர். காட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்கு அறிந்தவர்கள். காட்டில் யானை , புலி போன்ற விலங்குகளின் தன்மைகளை நன்கு புரிந்துகொண்டு, அவற்றுடன் மோதல் போக்கில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஷாஜியுடன் காட்டிற்குச் செல்வதே ஒரு தனி அனுபவம்தான். சத்தம் எழுப்பாமல் எல்லாப் புலன்களையும் செலுத்தி முழுக் கவனத்துடன், மிகவும் நிதான நிலையில் இருப்பார். அவருடன் காட்டிற்குச் செல்லும்போது அவர் இருக்கும் தைரியத்தில் பயமின்றிப் பயணிக்கலாம். ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் கொடியைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

மரங்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதில் எங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது, பணியர்கள் கையாளும் உத்தியைப் புன்முறுவலுடன் அவர் பகிர்ந்தார். அவர்கள் மரங்களை மேல்நோக்கிப் பார்ப்பதில்லை . மாறாக மரத்தின் தண்டையும் பட்டையையும் கூர்ந்து கவனிக்கின்றனர். முதலில் எல்லா மரத் தண்டுகளும் ஒரே மாதிரிதான் எங்களுக்குக் காட்சியளித்தன.

ஆனால், தொடர்ந்து கவனித்தபோது சிறுசிறு வித்தியாசங்கள், விவரங்கள் விளங்க ஆரம்பித்தன. உதாரணத்திற்குச் செருபுன்னை என்கிற மரத்திற்குத் தண்டில் நீள வடிவத்தில் விரிசல்கள் போன்ற அமைப்பு இருந்தது. காக்கா மரத்திற்கு நிறைய துளைப் பட்டைகள் தண்டு முழுவதும் படர்ந்திருந்தது. ’வெண்ணெய் வீட்டி’ என்கிற மரத்தில் மரப்பட்டை கீழிருந்து மேல் நோக்கி உரியும் தன்மையுடன் இருந்தது. சில மரங்களுக்கு மரப்பட்டையின் கீழே தண்டு வெ ள்ளையா க இருந்தது. சில மரங்களுக்குச் சி வப்பாக இருந்தது.

அடுத்த பெரிய வித்தியாசம் கிளை அமைப்புகள். நாங்கள் ஆழமாக அவதானி க்க ஆரம்பித்த பின், இப்படி வெவ்வேறு நுணுக்கமான அம்சங்கள் புலப்படத் தொடங்கின. ஓர் ஆசிரியராக மற்றுமொரு விஷயமும் என் கவனத்திற்கு வந்தது. வகுப்பறையில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் காட்டில் அவதானித்துக் கற்பதற்குத் திண்டாடினர். மாறாக, நன்றாகக் கவனிக்கும் திறமை கொண்ட மாணவர்கள் சிறப்பாகவும் எளிதாகவும் பயின்றனர்.

உறவுத் தாவரங்கள

தமிழ்நாட்டுக் காடுகளில் காணப்படும் மரங்களோ அவற்றின் நெருங்கிய உறவுத் தாவரங்களோ அங்கு இருந்தன. உதாரணத்திற்கு மயிலாடி மரம். முன்னர் குறிப்பிட்டதுபோல் புன்னை மரத்தின் உறவு மரம் இது. அதே போல் காட்டு மாமரம். இம்மரங்களை அடையாளம் கண்டது, எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ள உதவியது.

இதில் இன்னுமொரு சுவாரசியமான விஷயமும் உண்டு. பணியர், மலையாள மொழிப் பெயர்களை முதலில் கற்றுக்கொண்டு பின்னர் மரங்களின் அறிவியல் பெயரைக் கண்டறிய நாங்கள் பட்டபாடும் அதிகம். நூறாண்டிற்கு முன்னர் ஆங்கிலேயர் எழுதிய குறிப்பேடுகளில் அறிவியல் பெயர்களும் உள்ளூர்ப் பெயர்களும் இருந்தன. அக்குறிப்பேடுகளைப் புரட்டிப் புரட்டி பெயர்களைக் கண்டறிவது பெரும் வேலையாக இருந்தது. ஆனால், இப்போது தொடர்ச்சியாகக் கற்று, பதினெட்டு நாட்களில் ஐம்பது வகை மரங்களைப் பற்றி ஓரளவு புரிந்துகொண்டுள்ளோம். மரங்களுடனான இந்தப் புது உறவு எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டுகிறது.

மரங்களை அடையாளம் காணஆரம்பித்த பின் மரங்களிடையில் உள்ள உறவு பற்றியும் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். பல தகவல்களை ஷாஜியிடம் இருந்தும், சிலவற்றை நாங்களே கவனித்தும் சிலவற்றைக் குறிப்பேடுகளிலிருந்து திரட்டியும் தெரிந்துகொண்டோம்.

  • இருவாச்சிப் பறவைகள் எந்தெந்த மரத்தின் பழங்களை விரும்பி உண்ணும்? எந்த மரத்தில் கூடு கட்டும்? (அயனி பலா )
  • சோலை மந்திக்கு (சிங்கவால் குரங்கு) பிடித்த மரம் எது? (முள்ளன் பாலி)
  • யானைகளுக்குப் பிடித்த மரங்கள் எவை என்பது போன்ற புரிதல்களை ப் பெற்றோம்.

Leave a Reply

Your email address will not be published.